“என்ன செய்யணுமோ செய்யுங்க” அமலாக்கத்துறையிடம் ஐ.பெரியசாமி சொன்ன விஷயம்…!!

By Soundarya on ஆவணி 16, 2025

Spread the love

திமுகவின் சீனியர் அமைச்சர் அமலாக்கத்துறை அதிகாலை முதலே தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் க்கள் விடுதியில் உள்ள ஐ.பெரியசாமியின் அறையில் பத்து பேர் கொண்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதனிடையே எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஐ.பெரியசாமி பேசிய விஷயம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதில், “இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான். தென்மண்டலத்தில் திமுக வலிமையாக இருக்கிறது. தேர்தல் வேலையை முடக்குவதற்காகவே இந்த ரெய்டு. முடங்கி போகமாட்டேன். என்ன செய்யணுமோ செய்யுங்க” என அதிகாரிகளிடம்  சொல்லியதாக கூறப்படுகிறது.