வட போச்சே! Gpay, Phonepe பயனர்களுக்கு ஷாக்… இனி இந்த சேவை கிடையாது… திடீர் அறிவிப்பு..!

By Nanthini on ஆவணி 14, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்துவிட்டது. அப்படி செல்போன் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலானோர் பண பரிவர்த்தனைகளுக்கு UPI செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதில் google pay, Phonepe உள்ளிட்ட செயலிகள் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனிடையே UPI செயலிகளில் பயனர்களின் தேவைக்கு ஏற்றவாறு அவபோது புதுப்புது அப்டேட்டுகள் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அவசர பண தேவை இருக்கும்போது நண்பர்களிடம் ஃபோன் பண்ணி கடன் கேட்க தயங்குவார்கள் கூட Gpay, Phonepay மூலமாக தங்கள் பண தேவை பூர்த்தி செய்து கொள்கின்றனர். பணம் அனுப்பும் பகுதியில் Request அம்சம் மூலம் இதனை செய்து கொள்ளலாம். UPI பரிவர்த்தனைகளில் இந்த வசதியை அக்டோபர் 1 முதல் நிறுத்த NPCI முடிவு செய்துள்ளது. பரிவர்த்தனை பாதுகாப்பை வலுப்படுத்தி மோசடிகளை தடுக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இனி டிஜிட்டலில் கடன் கேட்க முடியாது.