தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு திட்டங்கள் தொடர்பாகவும் தமிழக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார். அதில், தூய்மை பணியாளர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும். 3 ஆண்டுகளில் தூய்மை பணியாளர்களுக்கு வீடுகள் வழங்கப்படும். சுயதொழில் தொடங்க 3.5 லட்சம் மானியம் வழங்கப்படும். 6 சதவீதம் வட்டி மானியம். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படும்.
தூய்மை பணியாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில புதிய உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். தூய்மை பணியாளர்கள் உயிரிழந்தால் 5 லட்சம் காப்பீடு உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு 6 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
