சுதந்திர தினம்… தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பறந்து அதிரடி உத்தரவு…!

By Nanthini on ஆவணி 14, 2025

Spread the love

இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15 நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இந்த நாள் நாடு முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்தியர்களால் மிகுந்த பெருமையுடன் கொண்டாடப்படுகின்றது. நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள், பொது இடங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினம் கொண்டாடப்படும். இந்நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

நாளை பள்ளி வளாகத்தை வண்ண காகிதங்கள் மற்றும் மலர்களால் அலங்காரம் செய்து தேசியக்கொடி ஏற்றி விழாவை நடத்த வேண்டும். பிளாஸ்டிக் வகை தேசிய கொடிகளை கண்டிப்பாக விழாவில் பயன்படுத்தக் கூடாது என்றும் சுதந்திர போராட்ட தியாகிகள் உள்ளிட்டோரை அழைத்து விழாவில் பங்கு பெற செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தவிர தேசிய கொடியை தலைகீழாக அல்லது கிழிந்த கொடிகளை ஏற்றக்கூடாது. இது சார்ந்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தேவையான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.