தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.
இப்படியான நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வலுவாக உள்ளது. இதனால் அந்த கூட்டணியை வீழ்த்த 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் சூர்யாவை களம் இறக்க திமுக முயற்சித்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது. குறிப்பாக விஜய் வருகையால் கொங்கு மண்டலத்தில் திமுக வாக்கு சரியலாம் என்பதால் அதே பகுதியை சேர்ந்த சினிமா வெளிச்சத்தில் இருக்கும் சூர்யாவை காளம் இறக்கினால் திமுக வெற்றிக்கு உதவும் என ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளாராம்.
