நாடே அதிர்ச்சி..! மாற்றுத்திறனாளி பெண்ணை ஓட ஓட துரத்தி… கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்… மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இல்லம் பக்கத்திலேயே நடந்த கொடூரம்..!!

By Soundarya on ஆவணி 13, 2025

Spread the love

உத்தரப்பிரதேசத்தில் தேஹத் கோட்வாலி பகுதியில் உள்ள பகதூர்பூர் காவல் நிலையத்திலிருந்து 20 மீட்டர் தொலைவில் நேற்று முன்தினம் இரவு 22 வயது மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதாவது மாவட்ட நீதிபதி (DM), காவல் கண்காணிப்பாளர் (SP) மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதி (ADM) ஆகியோரின் அதிகாரப்பூர்வ இல்லங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு பகுதியில் இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர் சாலையில் ஓடும் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்  வெளியாகியுள்ளன. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் தனது தாத்தா பாட்டி வீட்டிலிருந்து மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்கு அருகில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் அவரை இடைமறித்துள்ளார்.

பின்பு அப்பெண்ணை கடத்தி ஒரு வெறிச்சோடிய வயலுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவரும் அவரின் கூட்டாளிகளும் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அந்த பெண்ணிற்கு வாய் பேச முடியாததால், அந்தப் பெண்ணால் உதவிக்கு அழைக்க முடியவில்லை. குற்றத்தைச் செய்த பிறகு, குற்றவாளிகள் சம்பவ இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.  பல உயர் பாதுகாப்பு இடங்களுக்கு  பக்கத்திலேயே இது போன்ற சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

 

ஆனால் பகதூர்பூர் காவல் நிலையத்தின் மூன்று முதல் நான்கு சிசிடிவி கேமராக்கள் அப்போது செயல்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எஸ்பியின் இல்லத்திற்கு அருகிலுள்ள ஒரு கேமராவில் இருந்து எடுக்கப்பட்ட காட்சிகளில், பாதிக்கப்பட்டவர் ஓடுவதையும், மோட்டார் சைக்கிளில் வந்த ஆண்கள் பின்தொடர்வதையும் காட்டும் 14 வினாடிகள் கொண்ட வீடியோ  பதிவாகியுள்ளது. இதனையடுத்து பல்ராம்பூர் போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த  குற்றத்தில் தொடர்புடைய இருவரை கைது செய்தனர். ஒரு என்கவுண்டரைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.