திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள கணக்கன்பட்டியை சேர்ந்தவர்தான் பழனியப்பன் (55). இவர் கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி விஜயா (50). இவர்களுக்கு கார்த்திகா , தனலட்சுமி [23] இரண்டு மகள்களும் , நல்லசாமி என்ற மகனும் உள்ளனர். கார்த்திகாவிற்கு திருமணமாகி வெளியூரில் வாழ்கிறார். நல்லசாமிக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனலட்சுமி [23] இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். தனலட்சுமிக்கு திருமணத்திற்காக வரன் பார்த்தும் வந்துள்ளனர். அவருக்கு உடல்நிலை பாதிப்பால் திருமண வரன் கைக்கூடவில்லை. மகளின் உடல் நிலை பாதிப்பால் பழனியப்பன் சில நாட்களாகவே மனம் உ டைந்து காணப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், கடந்த 9ஆம் தேதி விஜயா, மகன் நல்லச்சாமி இருவரும் திருச்செந்தூர் சாமி தரிசனத்திற்காக சென்று உள்ளனர். இதற்கிடையே விஜயா தனது கணவரின் செல்போனுக்கு நேற்று முன்தினம் பலமுறை தொடர்பு கொண்டும் செல்போனை யாரும் எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த விஜயா உடனடியாக கணக்கன்பட்டியில் உள்ள உறவினர்களுக்கு தொடர்புக் கொண்டு தகவலை தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து உறவினர்கள் பழனியப்பன் வீட்டிற்கு வந்துள்ளனர். வீடு உள்பக்கம் தாப்பாள் போட்டிருந்தது, பலமுறை தட்டிப் பார்த்தும் கதவைத் திறக்காததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவலை தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து போலீசார் பழனியப்பன் வீட்டிற்கு வந்து கதவை உடைத்து பார்த்தனர். உள்ளே பழனியப்பன் தூக்கில் தொங்கி படியும், தனலட்சுமி இறந்த நிலையில் தரையில் பிணமாகவும் கிடந்துள்ளனர்.
ஆனால் தனலட்சுமிக்கு இறுதிச்சடங்கு செய்ததது போல மாலை போட்டு பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்களும் போலீசாரும் பிரேத பரிசோதனைக்காக உடல்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று பிரேதபரிசோதனை நடந்தது. அதன், முடிவில் தனலட்சுமி கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்யப்பட்டதாகவும் அதன் பின் பழனியப்பன் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
இதுக்குறித்து, போலீசார் கூறும் போது தனலட்சுமிக்கு உடல்நிலை பாதிப்பு இருந்தது. அதன் காரணத்தினால் திருமணத்தடையும் ஏற்பட்டுள்ளதால் மன உளைச்சலில் பழனியப்பன் இருந்துள்ளார். அதனால் மகள் கஷ்டப்படுவதை பார்த்து வேதனை அடைந்த அவர் தனலட்சுமியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது என்று போலீஸ் தரப்பில் கூறியுள்ளனர்.
மகள் தனலட்சுமியை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்துவிட்டு பின்னர் அவருக்கு புதிய பட்டுச் சேலைப் போர்த்தி, பத்திச் சூடம் இட்டு, நெற்றியில் சந்தனம், குங்குமம், திருநீறு பூசி இறுதிச்சடங்கு செய்துவிட்டு. அவரும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திவுள்ளது.
