உயிருக்கு உயிராய் காதல்.. அந்த ஒரு விஷயத்துக்காக கட்டாயப்படுத்திய காதலன்.. கடிதம் எழுதி வைத்துவிட்டு உயிரை மாய்த்து கொண்ட பெண்..!

By Divyamayakannan on ஆவணி 11, 2025

Spread the love

சோனா எல்டோஸ்[ 23] இவர் கேரளா எர்ணாகுளம் மாவட்டம்  கொத்தமங்கலத்தை சேர்ந்தவர். இவர் ஆசிரியர் பயிற்சி மாணவியாக உள்ளார்.  இஸ்லாமிய இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் ரமீஸ்  மற்றும்  உறவினர்களும் சோனாவை இஸ்லாம் மதத்திற்கு மாற கட்டாயப்படுத்திவுள்ளனர்.  இதனால் மணமுடைந்த சோனா நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துச் கொண்டார்.

அவர் எழுதிய கடிதம் சிக்கி உள்ளது. சோனா,  தனது காதலனும் அவரது குடும்பத்தாரும் என்னை மதம் மாற சொல்லி  வற்புறுத்தினர். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். காதலன் ரமீஸை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இச்சம்பவத்தைக் குறித்து சோனாவின் தாயிடம் கேட்டபோது ரமீஸ்  குடும்பத்தினரர் திருமணத்திற்கு முதலில் ஒத்துக் கொண்டனர். அதைப்பற்றி பேச்சு வார்த்தையும் போய்க் கொண்டு தான் இருந்தது. அவர்கள் சோனாவை மதம் மாறச் சொல்லி வற்புறுத்தினர், ரமீஸ்  மீது உள்ள காதலால் சோனாவும் மதம் மாற ஒப்புக்கொண்டால்.

   

பின்னர்  ஏதோ ஒரு கடத்தல் வழக்கில்  தொடர்பு இருந்தது தெரியவந்தது. சோனா மதம் மாற மறுத்துவிட்டாள் . பின்பு சோனா, ரமீஸ்   உண்மையாக நேசித்ததால் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாள். இருப்பினும் ரமீஷ் சோனாவை அவனது வீட்டில் ஒரு அறையில் அடைத்து அடித்து துன்புறுத்திவுள்ளான்,  மதம் மாற சொல்லி கட்டாயப்படுத்தி கொடுமைப்படுத்தினான் என்று சோனாவின் தாயார் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.