பெண்களே.. அந்த ஒரு விஷயத்துக்காக மட்டும் கல்யாணம் பண்ணிக்க வேண்டாம்… அட்வைஸ் கொடுக்கும் பிரபல நடிகை..!

By Divyamayakannan on ஆவணி 11, 2025

Spread the love

முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கும் பாமா குருப், மலையாளத் திரையுலகில் புகழ் உச்சியில் உள்ளார். இவர் தமிழில், எல்லாம் அவன் செயல், சேவற்கொடி, இராமானுஜம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் இவர் instagramல் வரதட்சனை கொடுமை பற்றி ஒரு பதிவுப் போட்டிருந்தார்.

அதில், பெண்களாகிய நமக்கு உண்மையில் திருமணம் தேவையா? யாரும் வரதட்சணை கொடுத்து திருமணம் செய்ய வேண்டாம், அவசியமும் இல்லை. அவர்கள் உங்களை விட்டுச் சென்று விட்டால் என்ன செய்வீர்கள்? எல்லா பணத்தையும் எடுத்துக்கொண்டு உங்களை மன உளைச்சலில் தள்ளி விடுவார்கள். இது போன்ற சூழ்நிலையில் பெண்கள் நிச்சயம் திருமணம் செய்து கொள்ளாமலே இருக்கலாம். செய்து கொண்டால் தற்கொலை செய்யும் அளவிற்கு தள்ளி விடுவார்கள் என்று பதிவிட்டுள்ளார்.

   

மேலும் தற்போது ஒரு பேட்டியில் பேசிய அவர், வரதட்சணை தடை சட்டபூர்வமாக செயல்பாட்டில் இருத்தாலும். இன்னும் பல பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். பெண்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்ளுங்கள். பணம் என்பது சொந்த நலனுக்காக மட்டுமே இருக்க வேண்டும். சமைத்து வீட்டை கவனித்துக் கொள்ள மட்டுமே திருமணம் கிடையாது. கணவர் தோல்வி உடையும்போது துனைவி மட்டுமே ஆதரவு கொடுப்பார் என்று பேசிவுள்ளார். இப்பேட்டி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.