பொதுத்தேர்வு ரத்து, ஆனா ஒரு கண்டிஷன்… பிளஸ் 1 மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை…!

By Nanthini on ஆவணி 11, 2025

Spread the love

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவர்கள் தேர்ச்சி பெரும் வரை தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மாநில கல்விக் கொள்கையின்படி நடப்பாண்டு முதல் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் முந்தைய கல்வி ஆண்டுகளில் பிளஸ் ஒன் தேர்வு எழுதி ஏராளமானவர்கள் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.

இதனால் அவர்கள் அனைவருக்கும் இந்த உத்தரவு பொருந்துமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ள நிலையில், தேர்ச்சி பெறாத மாணவர்கள் தேர்ச்சி பெறும் வரை தேர்வு தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை மாணவர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.