தமிழக மக்களுக்கு காலையிலேயே ஷாக்.. மீண்டும் உயரப் போகும் மின் கட்டணம்?.. அதிர்ச்சி தரும் காரணம்…!

By Nanthini on ஆவணி 11, 2025

Spread the love

SC- யின் புதிய உத்தரவால் மின்சார கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மின்சார விநியோக நிறுவனங்களுக்கு தரவேண்டிய மொத்த நிலுவைத் தொகையையும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் SC உத்தரவு பிறப்பித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு கணக்கின்படி தமிழக அரசு சுமார் ரூ.87,000 கோடி நிலுவை வைத்துள்ளது.

இந்நிலையில் மின் கட்டணத்தை உயர்த்துவது தவிர்க்க முடியாதது என கூறப்படுகிறது. ஒருவேளை தேர்தல் வரை மின்கட்டணம் உயர்த்துவது தள்ளி போகலாமே தவிர அதன் பிறகு தமிழகத்தில் மின் கட்டணம் மேலும் உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் 50 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மின் கட்டணம் உயர உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.