சனாதனத்திற்கு எதிராக பேசியதால் கமலஹாசனுக்கு, நடிகர் ரவிச்சந்திரன் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். அக்கட்சியின் துணை தலைவர் மௌரியா, முக்கிய நிர்வாகிகளுடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார்.
அகரம் பவுண்டேஷனின் நிகழ்ச்சியில் கமலஹாசன், சனாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களை தெரிவித்ததால், அதனை எதிர்க்கும் வகையில் சின்னத்திரை நடிகர் ரவிச்சந்திரன் கமலஹாசனின் கழுத்தை அறுப்போம், என கொலை மிரட்டல் விட்டதாக அக்கட்சியினர் புகாரில் குறிப்பிட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையரை நேரில் சந்தித்து, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், இந்த மிரட்டலை குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
