சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக 9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதுவதற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரக்கூடிய 2026-27 ஆம் கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான ஒப்புதல் கடந்த ஜூன் மாதம் வழங்கப்பட்ட நிலையில் ஒவ்வொரு பருவத்துக்கும் மொழிப்பாடங்கள், கணிதம், அறிவியல் மற்றும் சமூகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு மூன்று எழுத்து தேர்வுகள் நடத்தப்படும்.
அதன்படி 9 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறையை கொண்டு வருவதற்கு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் இனி 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கான பாடத்திட்டங்களை மனப்பாடம் செய்ய வேண்டாம். அவர்கள் பாடப் புத்தகங்கள் மற்றும் நூலகங்களில் எடுத்த குறிப்புகள் அல்லது பள்ளி சார்பில் வழங்கிய குறிப்புகள் உள்ளிட்டவற்றை தேர் வரைக்கு எடுத்துச் சென்று அதனை பார்த்து தேர்வு எழுதலாம். இந்த புத்தகம் பார்த்து தேர்வு எழுதும் நடைமுறை மாணவர்கள் மனப்பாடம் செய்வதை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புத்தகம் இருந்தாலும் கேள்விகளைப் படித்து புரிந்து கொண்டால் மட்டுமே அதற்கான விடையை புத்தகத்தில் இருந்து எடுத்து எழுத முடியும் என கூறப்பட்டுள்ளது.
