7-வது முறையும் தோல்வி… திமுகவுக்கு புதிய நெருக்கடி… செம அப்செட்டில் முதல்வர் ஸ்டாலின்…!

By Nanthini on ஆவணி 10, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் மீண்டும் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று திமுக தலைமை ஒரு பக்கம் சிந்தித்து கொண்டு இருக்க மறுப்பக்கம் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதற்கான வேலைகளை செய்து வருகின்றார். இவர்களுக்கு இடையே தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் புதிய ஆட்சியை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். என்னதான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருந்தாலும் திமுகவின் கூட்டணி என்பது பலமாக உள்ளது. அதனால் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என்ற நம்பிக்கையில் முதல்வர் ஸ்டாலின் உள்ளார்.

இப்படியான நிலையில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தலைநகரில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே ஏழாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திட்டமிட்டபடி போராட்டம் தொடரும் என போராட்ட குழு அறிவித்துள்ளது. பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இது திமுக அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தலைநகரிலேயே இருக்கும் முதல்வர் ஸ்டாலின், போராட்டக்காரர்களை ஏன் சந்திக்கவில்லை என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.