“இதுவல்லவா உண்மையான பாசம்” ஆபத்தில் இருந்த தம்பி… தனது சிறுநீரகத்தை கொடுத்து காப்பாற்றிய அக்கா… ரக்ஷா பந்தனின் ஓர் நெகிழ்ச்சி சம்பவம்..!!

By Soundarya on ஆவணி 10, 2025

Spread the love

ரக்ஷா பந்தன் பண்டிகை என்பது சகோதர சகோதரிகளுக்கு இடையே  பிரிக்க முடியாத அன்பு மற்றும் ஒரு பாதுகாப்பின் அடையாளம் .இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் காந்திநகரை சேர்ந்தவர் கிரண் பாய். இவர் சிறுநீரக செயலிழப்பு காரணமாக பாதிக்கப்பட்டார். சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே அவருக்கு ஒரே வழி என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் அதிர்ச்சியில் இருந்த குடும்பத்தினர்  சிறுநீரக தானத்திற்காக  காத்துக் கொண்டிருந்தார். கிரண் பாயின் நான்கு  சகோதரிகள் தங்கள் சிறுநீரகங்களை தங்களுடைய சகோதரருக்கு தானம் செய்ய விருப்பம் தெரிவித்து மூத்த சகோதரி கனடாவில் இருந்து இந்தியாவிற்கு வந்துள்ளார் . ஆனால் அவருடைய சிறுநீரகத்தை பொருத்த முடியாது என்று கூறியதால் இரண்டாவது சகோதரியின்  சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

உடனடியாக அறுவை சிகிச்சையும் செய்ய முடிவு செய்யப்பட்டது. இது குறித்து கிரண் பாய் கூறுகையில், என்னுடைய எப்போதும் என் சகோதரியோடு வந்து எங்களை ஊக்குவித்தார். அவருடைய ஆதரவின் காரணமாக என் சகோதரி எனக்கு சிறுநீரகத்தை கொடுத்தார் என்று கூறியுள்ளார். இதுகுறித்து கிரண்பாயின் சகோதரி கூறுகையில், “ஒரு சகோதரி தன்னுடைய சகோதரன் வலியை எப்படி பார்க்க முடியும்? நாங்கள் எண்களின் சகோதரர் பிரச்சினையை கேள்விப்பட்டவுடன் நான்கு சகோதரிகளும் ஒப்புக்கொண்டோம். என் மாமியார் உட்பட என்னுடைய முழு குடும்பமும் எனக்கு ஒத்துழைப்பாக இருந்தது  என்று கூறியுள்ளார். ரக்ஷா பந்தன் நாளில் சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டி அவரை பாதுகாப்பதாக உறுதி அளித்து தன்னுடைய சகோதரனுக்கு உயிர் கொடுத்து ஒரு தனித்துவமான ரக்ஷா பந்தன் சூத்திரத்தை கட்டுவதன் மூலம் ஒரு படி மேலே சென்றுள்ளார்.