தமிழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு தமிழக வெற்றிக்கழகம் பெயரில் நடிகர் விஜய் கட்சியை தொடங்கி தன்னுடைய அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். மேலும் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறி தனித்து போட்டியிட இருக்கிறார். மேலும் இந்த மாதம் மதுரையில் அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற உள்ளது. குறிப்பாக சட்டம ன்ற தேர்தல் நடைபெற இன்னும் எட்டு மாதங்கள் உள்ள நிலையில் மதுரை மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்ட நிலையில், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் தீவிரமாகியுள்ளது. அந்தவகையில் அறிக்கையை தயாரிப்புப் பணியில் தவெக தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக திமுக, அதிமுக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், தமிழக வெற்றிக் கழக தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் எதுவும் இடம்பெறக் கூடாது என்பதில் தலைவர் விஜய் உறுதியாக இருக்கிறாராம். பொதுமக்களை நேரில் சந்தித்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்களை கேட்டறிவதற்கு நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
