மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி உடன் கூட்டணி?… தடாலடியாக அறிவித்த டிடிவி தினகரன்… யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்..!

By Nanthini on ஆவணி 10, 2025

Spread the love

எடப்பாடி பழனிச்சாமியுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தடாலடியாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய டிடிவி தினகரன், நான் பெரிதும் மதிக்கும் அரசியல் கட்சி தலைவர் திருமாவளவன். கடந்த ஓராண்டு காலமாகவே அவர் பேச்சின் சில குழப்பங்கள் தெரிகின்றது. தன்னிச்சையாக ஒரு கருத்தை தெரிவிக்கிறார். அதற்கு எதிர்ப்பு வந்தால் நான் அப்படி சொல்லவில்லை, நீங்கள் தவறாக புரிந்து கொள்கிறீர்கள் என்று தலைகீழாக மாற்றிப் பேசுகின்றார். சமீபத்தில் எம்ஜிஆர் பற்றி பேசிவிட்டு தெளிவற்ற கருத்துக்களை முன்வைக்கின்றார். எங்களுக்கு மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைய வேண்டும் என்ற எண்ணம் இல்லை.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கி ஏழு ஆண்டுகள் முடிந்த எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எந்த இலக்கை நோக்கி தொடங்கப்பட்டதோ அந்த இலக்கை அடையும் வரை எங்களுடைய பயணம் ஓயாது. தீய சக்தி திமுகவை வீழ்த்துவதற்காக அம்மாவின் உண்மை தொண்டர்கள் ஒரே கொடையின் கீழ் பல சண்டை சச்சரவுகளை தாண்டி ஒன்றிணைந்து நிற்கின்றோம். மற்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர் என்பதற்காக நாங்களும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட வேண்டும் என்று அவசியம் கிடையாது. உரிய நேரத்தில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவோம். போட்டியிடுவேன் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.