மதுரை பொன்னமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, கூலி தொழிலாளி. இவருடைய மகள் பாண்டிச்செல்வி (24) ஒரு பட்டதாரி. தற்போது திருமங்கலம் அண்ணாநகர் பகுதியில் கருப்பையா குடும்பம் வசித்து வருகிறது.
அங்குள்ள உணவகத்தில், சிக்கன் ரைஸ் வாங்கி வீட்டிற்கு வந்து சாப்பிட்ட பாண்டி செல்விக்கு, வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட பெற்றோர் மற்றும் உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்தார். அவரது உடலை கண்ட பெற்றோர், கதறி அழுதனர். இது குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
