“என்னையா காசு, பணம் செத்தா எதை கொண்டு போறோம்”… பிச்சை எடுத்து நாய்களுக்காக செலவழித்து மகிழ்ச்சியாக வாழும் முதியவரின் நெகிழ வைக்கும் செயல்…!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே பணத்தை நோக்கிதான் ஓடிக்கொண்டிருக்கின்றோம். தூங்கி எழுந்தது முதல் இரவு உறங்க செல்வது வரை நம்முடைய நினைப்பில் பணத்தின் தேவைதான் ஓடிக்கொண்டிருக்கின்றது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதாது என்று மேலுக்கு மேல் சம்பாதித்து கொண்டு மகிழ்ச்சியாக செலவழித்து ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இப்படி அனைவருமே பணம் என்று ஓடிக் கொண்டிருக்கும் சூழலில், முதியவர் ஒருவர் பிச்சை எடுத்து அதில் வரும் பணத்தை நாய்க்காக செலவழிக்கும் சம்பவம் பலரையும் வியக்க வைக்கிறது.

பிரேசிலில் சாலையோரத்தில் பிச்சை எடுக்கும் வயதான முதியவர் ஒருவர் தனக்கு கிடைக்கும் பணத்தை தெரு நாய்களுக்கு உடை மற்றும் பொம்மைகளை வாங்க பயன்படுத்துகின்றார். இவரிடம் அந்த ஊரில் இருக்கும் தெருநாய்கள் அனைத்தும் அன்போடும் பாசத்தோடும் நடந்து கொள்கின்றன. தினமும் பிச்சை எடுத்து அதில் வரக்கூடிய பணத்தை தனக்கு செலவழிப்பதை விட அந்த நாய்களுக்காக தான் அதிக அளவு செலவழிக்கின்றார். அந்த முதியவரின் இந்த தன்னலமற்ற செயலை தற்போது பலரும் பாராட்டி வருகிறார்கள்.