BREAKING: வீட்டில் பட்டாசு தயாரித்த போது கோர விபத்து… 3 பேர் உடல் சிதறி பலி, 2 பேர் படுகாயம்… சாத்தூரில் பரபரப்பு…!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜய கரிசல்குளத்தில் சட்ட விரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தக் கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 3 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த இரண்டு பேரு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.