புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு ஐசிஐசிஐ வங்கி அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. புதிய கணக்கு தொடங்குபவர்களின் குறைந்தபட்ச மாதாந்திர இருப்பு தொகையை நகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு ரூ.50,000 , சிறுநகரங்களுக்கு ரூ.25,000, கிராமப்புற பகுதிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இந்த நடைமுறை ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே கணக்கு வைத்திருப்பவர்களுக்கு பழைய AMB தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வு பெருநகர, நகர்ப்புற, அரை நகர்ப்புற மற்றும் கிராமப்புற கிளைகளில் உள்ள வாடிக்கையாளர்களை கடுமையாக பாதிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கையின் வழியாக இந்தியாவில் உள்ள உள்நாட்டு வங்கிகளில் மிக உயர்ந்த எம்ஏபி-ஐ கொண்ட வங்கியாக ஐசிஐசிஐ உருமாறி உள்ளது. குறைந்தபட்ச சராசரி இருப்பை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இது பற்றாக்குறையில் 6% அல்லது ரூ.500, இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அதுவாக நிர்ணயிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
