தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி கொண்டுள்ளனர். அதிமுக செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதுமே பயணம் செய்து கொண்டு வருகிறார்.
வருகின்ற 13, 14ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி வருவதற்கான வேலைகள் நடந்து கொண்டிருந்தது. அவரை வரவேற்கும் விதமாக சாலைகளில் பேனர்கள் வைத்துள்ளனர். இதனிடையே நேற்று அவ்வழியாக மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த தந்தையின் மீதும் மகனின் மீதும் மேம்பாலத்தில் வைத்திருந்த பேனர் கிழிந்து மேலே விழுந்தது. இதில் தடுமாறி வாகனத்தோடு கீழே விழுந்து விட்டனர்.
அப்பகுதியில் உள்ள மக்களும் சாலையில் இருந்த வாகன ஓட்டிகளும் மீட்டு முதலுதவி செய்த பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. யாருக்கு அடிபட்டது , அவர்கள் எந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் என்று எல்லாம் விசாரித்து வருகின்றனர். தந்தை மகன் மீது விழுந்த பேனர் வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க
