விண்வெளி வீரர் ஜிம் லொவல்(97) காலமானார். நிலவுக்குச் சென்ற அப்போலோ 13 விண்வெளி பயணத்தின் தளபதியாக பணியாற்றிய இவர் சுமார் 715 மணி நேரத்திற்கு மேலாக விண்வெளியில் இருந்துள்ளார். 1962 ஆம் ஆண்டு நாசாவில் பணிக்கு சேர்ந்த இவர் ஜெமினி 7 மற்றும் ஜெமினி 12 விண்வெளி பயணங்களிலும் பணிபுரிந்துள்ளார். ஒரு தலைமுறைக்கு முன்மாதிரியாக திகழ்ந்த இவருடைய மறைவுக்கு உலக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
