80 வயது தாத்தாவுக்கு காதல் வலை… ஆபாச வார்த்தைகள் பேசி கிளுகிளு பேச்சு… தனிமை வாட்டியதால் 5 பெண்களிடம் 9 கோடியை பறிகொடுத்த முதியவர்..!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் அனைவரும் மூழ்கிக் கிடக்கின்றனர். ஆனால் அதில் ஏற்படும் ஆபத்துக்களை யாரும் அறிவதில்லை. அப்படிதான் மும்பையை சேர்ந்த 80 வயது முதியவர் ஒருவர் மோசடி வளையில் சிக்கியுள்ளார். அதாவது மும்பையில் தனியாக வசித்து வரும் 80 வயது முதியவரின் மகன் வெளிநாட்டில் மனைவியுடன் வசித்து வருகின்றார். சமீபத்தில் முதியவர் தன் மகனை தொடர்பு கொண்டு 5 லட்சம் ரூபாய் பணம் கேட்ட நிலையில் தந்தை வங்கிக் கணக்கில் ஒன்பது கோடி இருந்ததால் தன்னிடம் ஏன் பணம் கேட்கிறார் என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.

எனவே அவர் தந்தையின் வங்கிக் கணக்கு விவரங்களை ஆய்வு செய்த போது தந்தை 8.75 கோடிக்கு மேல் பணத்தை பல வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு இது பற்றி தந்த இடம் விசாரித்த போது தன்னிடம் நான்கு பெண்கள் பணத்தை பறித்துக்கொண்ட சோகக் கதையை அவர் கூறியுள்ளார். உடனே மகன் மும்பை சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்துள்ளார். போலீசார் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில், 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முகநூலில் முதியவர் உலாவினார்.

   

அப்போது சார்வி என்ற பெண்ணுக்கு நட்பு கோரிக்கை வைத்த நிலையில் முதியவரின் நட்பு கோரிக்கையை ஏற்ற அந்த பெண் தான் கணவரை பிரித்து தனியாக வாழ்ந்து வருவதாக முதியவரிடம் கூறியுள்ளார். மேலும் முதியவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தையும் கூறியுள்ளார். இதனை நம்பிய முதியவர் அவருக்கு லட்சம் லட்சமாக பணத்தை அனுப்பி உள்ளார். திடிரென்று ஒரு நாள் அந்தப் பெண் முதியவரிடம் பேசுவதை நிறுத்தியுள்ளார்.

   

பிறகு அந்தப் பெண்ணின் தோழி என்று கூறி முதியவருடன் கவிதா என்ற பெண் பேசத் தொடங்கிய நிலையில் அவரும் ஆபாச வார்த்தைகளை அள்ளிவிட்டு பேசி முதியவரிடம் பேசியதை செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் இது பற்றி வெளியே சொல்லி விடுவதாகவும் மிரட்டி பணம் பரித்துள்ளார். பிறகு அந்தப் பெண்ணின் தந்தை என்று கூறி ஒரு பெண்ணும் முதியவரிடம் பேசி சார்வி நோய் பாதித்து உயிரிழந்து விட்டதாகவும் மருத்துவமனை கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறி முதியவரிடம் பணம் பறித்துள்ளார்.

 

பிறகு அவரும் திருமணம் செய்து கொள்வதாக கூறி முதியவரிடம் மீண்டும் மீண்டும் பணத்தை பரித்துள்ளார். அதன் பிறகு ஜாஸ்மின் என்ற பெயரில் மற்றொரு பெண் முதியவரை தொடர்பு கொண்டு அவரும் இதே பாணியில் பணத்தைப் பறித்துள்ளார். இதில் விசித்திரம் என்னவென்றால் இதில் எந்த பெண்ணையும் முதியவர் நேரில் பார்க்கவில்லை. சமூக வலைத்தளத்தில் பழகி அவர்களிடம் ஆன்லைன் மூலமாக ஒன்பது கோடியை அவர் அனுப்பி வைத்துள்ளார். சுமார் 21 மாத காலமாக இந்த மோசடி அரங்கேறிய நிலையில் முதியவர் தான் மோசம் போனதாக கடைசிவரை உணரவில்லை என்பதுதான் பரிதாபம். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.