தமிழ் சினிமாவில் எண்ணற்ற பிரபலங்கள் காதல் திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களில் பாடகர் க்ரிஷ் மற்றும் நடிகை சங்கீதா தம்பதிகளும் ஒருவர். நடிகை சங்கீதா 1998 இல் நடிகர் நெப்போலியன் நடித்த ‘பகவத்சிங்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்பாகவே இவர் சில மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். பாலா இயக்கத்தில் வெளியான ‘பிதாமகன்’ திரைப்படத்தில் இவருடைய கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. ‘வாரிசு’ திரைப்படத்தில் நடிகர் விஜயின் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் பல ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். சங்கீதா கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை திருமணம் செய்து கொண்டார்.
சங்கீதா முழுக்க முழுக்க நடிப்பு துறையில் இருப்பவர். கிரிஷ் பிண்ணனி பாடகர். எப்படி இவர்களுக்குள் காதல் மலர்ந்தது? என்பது பலருடைய கேள்வியாகவும் இருந்தது. அதுமட்டுமில்லாமல் சங்கீதா அவருடைய கணவரை விட வயதில் மூத்தவர் என்றும் பேசப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பாக பேட்டி கொடுத்த சங்கீதா இதை தெளிவுபடுத்தியிருந்தார். அவருடைய கணவர் க்ரிஷ் அவரைவிட ஒரு வயது பெரியவர் என்றும் சொல்லியிருந்தார் .
இவர்களுக்கு ஷிவியா எனும் ஒரு அழகிய மகள் உள்ளார். இந்நிலையில் சந்தோசமாக வாழ்ந்து வந்த இந்த ஜோடி தற்போது விவாகரத்து செய்ய இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. அதாவது சங்கீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சங்கீதாகிரிஷ் என்று இருந்த பெயரை தற்போது மாற்றியுள்ளார். ஆனால் கிரிஷ் உடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கவில்லை. இதனால் சீக்கிரம் விவாகரத்து அறிவிப்பு வெளியாகலாம் என்று கூறப்பட்ட நிலையில் விவாகரத்து வதந்திக்கு சங்கீதா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது எண்களின் விவாகரத்து குறித்த வதந்திகளில் உண்மையில்லை. தொடக்கம் முதலே இன்ஸ்டாகிராமில் எனது பெயரை சங்கீதா Act என்று தான் வைத்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
