“அம்மா நான் சொர்க்கத்துக்கு போறேன்”… 7ஆம் வகுப்பு சிறுவன் தற்கொலையில் திடுக்கிடும் தகவல்… உயிரைப் பறித்த சீரிஸ்..!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரில் 14 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தின் காரணம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காந்தர் என்ற 7 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் கடந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி இரவு தனது வீட்டில் அருந்த Guitar String இல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். சிறுவனின் தந்தை ஒரு இசை கலைஞர். தாயாரு சவிதா ஒரு நாட்டுப்புற பாடகி. சம்பவம் நடந்தபோது சவிதா நிகழ்ச்சிக்காக ஆஸ்திரேலியாவில் இருந்தார். சிறுவன் தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தில், அம்மா அப்பா, நீங்கள் என்னை 14 வருடங்கள் நன்றாக வளர்த்தீர்கள், நான் உங்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன், ஆனால் இன்று நான் வெளியேற வேண்டிய நேரம் இது. நீங்கள் என் கடிதத்தை படிக்கும் நேரத்தில் நான் சொர்க்கத்தில் இருப்பேன் என்று சிறுவன் எழுதி வைத்திருந்தான்.

இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த சிறுவன் பிரபலமான ஜப்பானிய Animc தொடரான Death Note என்ற தொடரை மிகவும் விரும்பி அந்த நிகழ்ச்சியின் ஒரு கதாபாத்திரத்தின் படத்தை தனது அறையில் வரைந்து இருப்பது தெரியவந்துள்ளது. எனவே அந்தத் தொடரின் தாக்கம் சிறுவனின் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அந்த டெத் நோட் கதையில்,ஒரு உயர்நிலை பள்ளி மாணவனுக்கு நரகத்திலிருந்து தவறுதலாக பூமியில் விழுந்த குறிப்பேடு கிடைக்கின்றது. ஒருவரின் பெயரை மனதில் நினைத்துக் கொண்டு அதில் எழுதினால் அவர்கள் மரணிப்பார்கள் என கொண்ட அந்த கதை தான் சிறுவன் பார்த்தது.