தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இப்படியான நிலையில் ஆகஸ்ட் 13ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் பணிகள் குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.
