இனி 15 நிமிடங்களுக்கு முன்பே டிக்கெட் புக் பண்ணலாம்… ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்….!

By Divyamayakannan on ஆவணி 8, 2025

Spread the love

இந்தியாவில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். ஆனாலும் தொலைதூரப் பயணத்திற்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டிதான் இருக்கிறது. ஆனால் இனி நீண்ட நாளுக்கு முன்பு முன்பதிவு செய்யாமல் 15 நிமிடத்திற்கு முன்பே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

அதாவது, வந்தே பாரத் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு IRCTC மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இடைநிலை நிலையங்களில் இருந்து ஏறும் பணிகள் ரயில் புறப்படுவதற்கு 15 நிமிடத்திற்கு முன்பு செய்து கொள்ளலாம். இந்த வசதிகள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் இயங்கி வரும் பாரத் ரயிலில் கிடைக்கிறது. அதாவது தெற்கு ரயில்வே மண்டலத்தின் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில்  மட்டுமே கிடைக்கும். பிற்காலத்தில் நாடு முழுவதும் உள்ள பிற வந்தே பாரத் ரயில்களிலும் செயல்படுத்த இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.