நடிகர் ராதிகா ஆப்தே 2011ல், லண்டனில் இருந்தபோது பிரிட்டிஷ் வயலின் கலைஞரான மற்றும் இசை அமைப்பாளருமான பெனடிக்ட் டெய்லரை காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு கடந்த 2024 டிசம்பரில் பெண் குழந்தை பிறந்தது. சமீபத்தில் நேஹா துபாய் நடத்திய ‘ஃப்ரீடம் டு ஃபீல்ட் ‘ நடத்திய நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார் .
அதில் அவர் கர்ப்பமாக இருந்தபோது நடந்த சில கசப்பான விஷயங்களை பகிர்ந்து உள்ளார். தான் கர்ப்பமாக இருந்தபோது நடித்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்று கூறினேன் . அதில் அனைவரும் மகிழ்ந்தனர் ஒருவரை தவிர. ஒரு தயாரிப்பாளர் மட்டும் தான் கர்ப்பத்தை அறிந்தவுடன் முகத்தை கோணிக்கொன்று சென்றார். காரணம் கர்ப்பமாக இருக்கும் போது உடலில் மாற்றங்கள், சோம்பல் என பல மாற்றங்கள் இருக்கக்கூடும். படப்பிடிப்பில் இறுக்கமான உடைகளை கொடுப்பது.
வலியால் அவதிப்பட்டாலும் மருத்துவரை பார்க்க அனுமதிக்காதது . இதுபோன்ற சில விஷயங்கள் என்னை வேதனைக்கு உள்ளாகியுள்ளது என்று ராதிகா கூறியுள்ளார். கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை கூட அந்த தயாரிப்பாளர் ஏற்றுக்கொள்ளவில்லை . அதே நேரத்தில் ஒரு ஹாலிவுட் திரைப்படத்திலும் பணிபுரிந்தேன் .அந்தப் படத்தின் இயக்குனர் எனக்கு அதிகமாக பசிக்கிறது நான் அதிகமாக சாப்பிடுகிறேன், சோம்பலாக உள்ளது என்று நிறைய பேசி இருக்கிறேன். அதற்காக நீங்க கர்ப்பமா இருக்கீங்க இதெல்லாம் நார்மல் தான் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் . உங்களுக்கு பிடித்ததை சாப்பிடுங்கள் உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருங்க அப்படின்னு கூறினார். இதைக் கண்டு நான் மகிழ்ந்தேன் என்று ராதிகா கூறினார்.
ராதிகா ஆப்தேவின் ரீசண்ட் மூவி 2025 ,மே30 அன்று வெளியானது ‘சிஸ்டர் மிட்நைட்’ . தற்போது அவர் ‘லாஸ்ட் டேஸ்’ என்ற ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் கிறிஸ்தவ மிஷனரி ஜான் ஆலன் சௌவின், வாழ்க்கையை அமைந்தே இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குனர் ஜஸ்டின் லின் ஆவர் . ஸ்கை யங் , நவீன் ஆண்ட்ரூஸ் , கென் லெங், டோபி வாலஸ், சியாரா பிராவோ, கிளேர் ப்ரைஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
