தமிழ்நாடு முழுவதும் தெருநாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டு, நிம்மதியை இழந்துள்ளனர். தெரு நாய்களால் பல சாலை விபத்துகள் ஏற்பட்டுவது மட்டும் அல்லாமல் இரவு நேரங்களில் வேலைக்கு செல்பவர்களிடம் அட்டூழியம் செய்கிறது. குழந்தைகள், பெரியவர்கள் , சிறியவர்கள் பாராமல் அனைவரையும் கடித்து நோய் தொற்றுக்கு உள்ளாக்குகிறது.
தெரு நாய்களுக்கு தடுப்பூசி
தெரு நாய்களை கட்டுப்படுத்த, முதல்வர் ஸ்டாலின் 100 அரசு கால்நடை மருத்துவமனைகளில், உள்கட்டமைப்பை மேம்படுத்தி, விலங்குகளின் இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சையை செய்யும் வசதிகளை உருவாக்க அதிகாரிகளுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் சென்னையில், புதிதாக 10 நாய் இனப்பெருக்க கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியில், வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி தெரு நாய்களுக்கு “மெகா ரேபிஸ் தடுப்பூசி” போடும் திட்டத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது சென்னை மாநகராட்சியில், 30 கால்நடை மருத்துவர்களை கொண்ட குழு, நேரடியாக தெருக்களுக்கே சென்று 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஏறத்தாழ நாளொன்றுக்கு 3000 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, அதற்கு அடையாளமாக நாய்களுக்கு மை வைக்கப்படும்.
கருணை கொலை
நோய்வாய்ப்பட்டு சுற்றி தெரியும் நாய்களை, பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் கொண்டு, கருணை கொலை செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
அப்படி கருணை கொலை செய்யப்பட்ட நாய்களை முறையாக அடக்கம் செய்து, அதன் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என கால்நடை துறை அறிவித்தது.
தமிழ்நாடு அரசின் இப்போது முயற்சியால் மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
