காலையில் வைக்கும் சாதம் இரவு வரை கெட்டுப் போகாது… டிப்ஸ் கொடுத்து ஒட்டுமொத்த நீயா நானா அரங்கத்தையும் அசர வைத்த பெண்… வெளியான ப்ரோமோ…!

By Nanthini on ஆவணி 8, 2025

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாக கூடிய மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் நீயா நானா. பல வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகின்றார். மற்ற நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடும்போது இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

   

ஒவ்வொரு வாரமும் இந்த நிகழ்ச்சியில் புதிதாக ஏதாவது ஒரு தலைப்பு கொண்டே விவாதம் நடைபெறும். இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

   

 

அதாவது இந்த வாரம் வேலைக்கு செல்லும் மாமியார் மற்றும் வீட்டில் இருக்கும் மருமகள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மாமியார் வேலைக்கு செல்வதால் வீட்டில் இருக்கும் மருமகள் மிகவும் ஜாலியாக இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் ஒரு சிலர் தனக்கு தேவைப்படும் பொருள் வாங்குவதற்கு அவர்களிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் மாமியார் ஒருவர் தான் குழந்தையை வைத்துக் கொண்டு வேலைக்கு சென்ற விதத்தையும் மற்றொருவர் குக்கரில் சாதம் வைத்தால் இரவு வரை இருந்தாலும் கெட்டுப் போகாது என்ற புதிய விஷயத்தையும் கூறியுள்ளனர். தற்போது நீயா நானாவின் இந்த வார ப்ரோமோ வெளியாகி அனைவருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது.