லட்சக்கணக்கில் கடன்… சாக நினைத்த சூர்யா பட நடிகருக்கு காட்சியளித்த கடவுள்… அவரே பகிர்ந்த சுவாரசிய சம்பவம்…!

By Divyamayakannan on ஆவணி 7, 2025

Spread the love

சூர்யா மற்றும்  ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான  7ஆம் அறிவு படத்தில்  வில்லனாக நடித்த நடிகர் தான் ராமநாதன். தற்போது விளம்பரங்களுக்கு டப்பிங் கொடுத்து வரும் ராமநாதன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவர் கனவில் வந்த நிகழ்வை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அதில்,எனக்கு 40 வயது இருக்கும் போது தொழிலில் பெருத்த நஷ்டத்தை அடைந்தேன், நிறைய கடன். லட்சத்தில் கடன் கொடுத்தவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொண்டு சென்று கொடுத்து விட்டு வரலாம் என்று சென்றேன். அங்கு இருந்த மூவர் என்னை ஒரு அறைக்குள் போட்டு அடைத்து விட்டனர். நான் கராத்தே மாஸ்டர் தமிழ்மணியிடம் கராத்தே கற்றுக் கொண்டேன். அதனால், அங்கு மூவரும் என்னை தாக்க ஆரம்பிக்கும் போதே நான் ஒருவரின் மூக்கை உடைத்து விட்டேன், இன்னொருவரின் பல்லையும் உடைத்து விட்டேன்.பின்பு, அந்த மூவரும் என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். எங்களை மன்னித்து விடுங்கள் நாங்கள் சென்று விடுகிறோம் என்று கதறினார்.

   

அந்த மூவரில் ஒருவனுக்கு மனநிலை சரியில்லாத மகன் ஒருத்தன் இருந்தான். அதனால்,கெஞ்சி கேட்டவர்களை காவல்துறையிடம் பிடித்துக் கொடுக்கவில்லை. கடனால் இறந்து போக முடிவெடுத்த எனக்கு தற்கொலை செய்து கொள்ள தைரியம் வரவில்லை. `1எனவே இரவு தூங்கும் போது விநாயகரிடம் நான் உன்னுடனே வந்து விடுகிறேன் என்னை எடுத்துக் கொள் என்று கூறிவிட்டு படித்தேன்.அன்று இரவே சாய் பாபா கனவில் வந்து நீ தற்கொலை செய்து கொள்ள நினைக்கிறாயா என்று கேட்டார்.

   

பின் பிள்ளையார்,ஷீரடி சாய்பாபா,திருச்செந்தூர் முருகன், திருப்பதி வெங்கடாஜலபதி,இயேசு கிறிஸ்துவ என அனைவருமே கனவில் வந்தன பின்பு சாய்பாபா என்னை கட்டி அணைத்து இனி கவலை படாதே உனக்கு நான் தொழிலை அமைத்து வைக்கிறேன் என்று கூறினார். உனக்கு டப்பிங் ஆர்டிஸ்ட், மாடலிங்,ஸ்கிரிப்ட் டைரக்டர் என பல முகங்களை நான் காண்பிக்கிறேன் என்று கூறினாரார்  அந்தக் கனவுக்கு பின் எனக்கு சினிமாவில் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆக வாய்ப்பு கிடைத்தது.இப்பொழுது டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பணியாற்றி வருகிறேன்.ஆனால் எனக்கு டப்பிங் என்றால் என்னவென்றே தெரியாது என்று நடிகர் ராமநாதன் கூறியுள்ளார்.