இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்த டிரம்ப்… இதனால் ஏற்படும் பின்விளைவுகள் என்னென்ன..? போச்சு எல்லாம் நாசமா போச்சு..!!

By Soundarya on ஆவணி 7, 2025

Spread the love

இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்துள்ளது அமெரிக்கா. இதனால் ஏற்படும் பின் விளைவுகள் என்னென்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களுக்கு டிரம்ப் 50% வரியை விதித்துள்ளார். இந்த முடிவால் வாகன உதிரி பாகங்கள், ஜவுளி, மருத்துவம் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் எக்கு, ரசாயனம் ஆகிய ஏற்றுமதியும் பாதிக்கப்படும். தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி வேலைவாய்ப்பு மற்றும்  உற்பத்தியும் பாதிக்கும்.

இந்திய தயாரிப்பு அமெரிக்க சந்தையில் எப்போதும் இல்லாத அளவிற்கு விலை உயர்ந்ததாக மாறும். இதனால் இந்திய பொருட்களை வாங்குவதை அங்குள்ள நுகர்வோர்கள் தவிர்ப்பார்கள். கூடுதல் வரியின் காரணமாக இந்த பொருட்களுக்கான தேவை குறையும். இது இந்திய தொழில் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமின்றி வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியும்  பாதிக்கும்.

   

அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்திய பொருட்களுக்கு பதிலாக வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து மலிவான மாற்றுகளை நோக்கி திரும்பக் கூடலாம். இது இந்தியாவிற்கு  நீண்ட கால பொருளாதார சவாலை ஏற்படுத்தும்.