எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்று தென்காசியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அம்பைய தொகுதியில் பிரச்சாரத்தின் போது பேசிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தேடிப் பிடிக்கும் நிலையில் தான் உள்ளது. கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் தி.மு.க.வுக்கு ஜால்ரா அடித்துக்கொண்டு இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை தீர்த்து வைத்தால் தான் மக்களின் மனதில் நிற்க முடியும். ஆனால் எந்த ஒரு பிரச்சனையிலும் போராடாமல் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஏன் பயத்தில் மௌனம் காக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகிக் கொண்டிருக்கிறது என்றும் பேசியுள்ளார் .
இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி விமர்சனத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார். ஈடி ஐடி ரெய்டுகளுக்கு பயந்து போய் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி கம்யூனிஸ்ட் அணிகளை பற்றி பேசுவது தமஸாகவுள்ளது. சீட்டுக்காக பயந்து போய் போராடாமல் இருக்கிறார்கள் என்று கூறும் நீங்கள் இதுவரை தமிழ்நாட்டில் மக்களுக்காக எத்தனை முறை போராடி உள்ளீர்கள். நாங்கள் போராடிய பட்டியலை வெளியிட தயார்! நீங்கள்? என்று சவால் விடுத்துள்ளார்.
