அம்மாடியோ..! இரண்டு பேருந்துக்கு இடையே சிக்கிக்கொண்ட ஆட்டோ… பதறவைக்கும் வீடியோ..!!

By Meena on ஆவணி 6, 2025

Spread the love

கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் அதிர்ச்சியூட்டும் வகையில் விபத்தின் சிசிடிவி வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோவை அரசு பேருந்து பின்னால் இருந்து மோதியதில் முன்னாள் சென்ற மற்றொரு பேருந்தில் ஆட்டோ மோதியது. அப்போது பின்னால் வந்த பேருந்து ஓட்டுனர் பிரேக் போடத் தொடங்கிய போது ஆட்டோ ஏற்கனவே இரண்டு பேருந்துகளுக்கு இடையே சிக்கிக் கொண்டிருந்தது. ஆட்டோ ஓட்டுனருக்கோ அல்லது பயணிகளுக்கோ எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படவில்லை.

ஆனால் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதைக்குறித்து சம்பவம் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளார்கள். மேலும் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை தொடங்கி வருகிறார்கள்.