கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தில் நிதி நெருக்கடியால் உயர் கல்விக்கு செல்ல முடியாமல் தவித்து வந்த ஜோதிகா என்ற மாணவிக்கு கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உதவியுள்ளார். பிலாகி தாலுகாவில் உள்ள ரப்கவி கிராமத்தைச் சேர்ந்த ஜோதிகா தனது பல்கலைக்கழகத்திற்கு முந்தைய படிப்பில் 85 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தார். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக உயர்கல்வியை தொடர் முடியவில்லை. இதனால் உதவி தேடி, அந்தக் குடும்பத்தினர் உள்ளூர் நலம் விரும்பியான அனில் என்பவரை அணுகியுள்ளார்கள்.
பின்னர் அவர் பெங்களூருவில் உள்ள அவரது கிரிக்கெட் தொடர்புகளைத் தொடர்பு கொண்டார். தற்செயலாக, இவர்களின் கோரிக்கை இறுதியில் ரிஷப் பண்ட்டை அடைந்தது. இதனையடுத்து மாணவிகல்வி கட்டணம் செலுத்த முடியாத செய்தியை அறிந்த ரிஷப் பண்ட் மனைவியின் படிப்பிற்கு தேவையான பணத்தை கல்லூரிக்கு ரூ.40000 பணத்தை நேரடியாக அனுப்பி உள்ளார். இந்த உதவிக்கு மாணவி ஜோதியும் கல்லூரி நிர்வாகமும் அவருக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளனர்.அதில், நான் BCA படிக்க வேண்டும் என்பதற்காக ரிஷப் 40,000 ரூபாயை எனக்கு கொடுத்து உதவினார்.
அவருக்கு நான் மிகவும் நன்றி கூறுகிறேன், மேலும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். அனில் அண்ணா மற்றும் அக்ஷய் நாயக் சாருக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் உதவியை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் ஒரு மென்பொருள் பொறியாளராக விரும்புகிறேன், இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்துவேன். பெண் குழந்தையைக் காப்பாற்றுங்கள், பெண் குழந்தைக்கு அதிகாரம் கொடுங்கள். ஒரு மென்பொருள் பொறியாளரான பிறகு, ஏழைக் குழந்தைகளுக்கும் உதவுவேன்” என்று கூறியுள்ளார்.
