சென்னையில் பெண் வக்கீல் ஒருவர் திருமணத்திற்கு முன்பு தன் காதலனுடன் நெருக்கமாக இருந்த அந்தரங்க வீடியோக்கள் இணையதில் பரவி வருகிறது . இதனை தொடர்ந்து பெண் வக்கீல் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்த நிலையில் . இந்த மனுவை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். இந்த வழக்கு நேற்று விசாரணை வந்த நிலையில் மனுதாரர் தரப்பில் மூத்தவக்கில் அபுடுகுமார் ஆஜராகி, பெண் வக்கீல் அந்தரங்க வீடியோ இன்னும் 13 இணையதளங்களில் உள்ளதாகவும், இந்த வீடியோவை முடக்க வேண்டும் என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் 1,400 சட்டவிரோத இணையதளங்களை முடக்கிய மத்திய அரசால் இந்த 13 இணையதளங்களை முடக்க முடியவில்லை என்றும் வாதாடினார்.
இதனை தொடர்ந்து அரசு சார்பில் ஆஜரான வக்கீல் குமரகுரு இந்த விவகாரம் குறித்து விசாரணை தள்ளி வைக்க வேண்டும் என்று வாதாடினார் . இதையடுத்து நீதிபதி, இராமாயணத்தில் வரும் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க வீடியோக்களும் அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் பரவி உலா வருவது பெரும் வேதனையை அளிக்கிறது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார் .மேலும் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி விசாரணையை வருகின்ற 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நிதிபதி உத்தரவிட்டுள்ளார்.
