BREAKING: அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் SI கொடூரமாக வெட்டி கொலை… தமிழகத்தில் கலையிலேயே பரபரப்பு சம்பவம்…!

By Nanthini on ஆவணி 6, 2025

Spread the love

மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் காவல் உதவி ஆய்வாளர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தோட்டத்தில் குடிபோதையில் ரகளை செய்வதாக வந்த புகாரை SI சண்முகசுந்தரம் விசாரிக்க சென்றுள்ளார். அப்போது எம்எல்ஏ தோட்டத்தில் பணியாற்றும் இரண்டு பேர் அவரை விரட்டி விரட்டி வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் குற்றவாளியை தேடி வருகின்றது.