புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று தன்னுடைய 75 வது பிறந்தநாளை கொண்டாடினார் அவருக்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, கவர்னர், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய மந்திரி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள். அதுபோல தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளதாவது, “வணக்கம்பா.. நன்றி.. வாழ்த்துக்கள் நல்லா இருக்கணும். நல்லா வரணும் என்று விஜய்க்கு பதில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதல்வர் ராமசாமிக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கும் இடையே நட்பு உள்ளது. 2021 ஆம் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்ற பிறகு பனையூரில் உள்ள விஜய் வீட்டில் அவரை நேரடியாக சந்தித்தார். அதன்பிறகு விஜய் கட்சி தொடங்கிய போதும் மாநாடு நடத்திய போதும் பல ஆலோசனைகளை வழங்கி உள்ளார் ரங்கசாமி. இப்போதும் இவர்கள் கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டலில் ரகசியமாக சந்தித்து பேசுவதாக கூறப்படுகிறது. இதனால் புதுச்சேரி சட்டசபை தேர்தலில் திமுகவுடன் முதலமைச்சர் ரங்கசாமி கூட்டணி அமைத்து போட்டியிடலாம் என்று எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
