IND VS ENG பரபரப்பான ஆட்டம்: “ரத்தம் ஒரு சொட்டு மிச்சமிருந்தாலும்” கடைசி விக்கெட்டிற்காக கையில் கட்டோடு களமிறங்கிய கிறிஸ் வோக்ஸ்…!!

By Soundarya on ஆவணி 4, 2025

Spread the love

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டியானது ஓவலில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. நடப்பு இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அதிக ஓவர்களை வீசிய பௌலராக திகழ்ந்துவரும் கிறிஸ் வோக்ஸ் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 57.5 வது பந்தில் ஜிம்மி ஓவர்டன் வீசிய பந்தை கருண் நாயர் அடித்தார். அப்போது அதனை பௌண்டரிக்கு போக விடாமல் தடுத்த கிறிஸ் வோக்ஸ் கையில் காயம் ஏற்பட்டது.

இதனால் அந்த பந்தில் இந்திய அணிக்கு 3 ரன்கள் கிடைத்தது. 4ஆவது ரன்னை ஓட கருண் நாயர் முயன்றார். ஆனால் கிறிஸ் வோக்ஸ் கீழே வலியால் சாய்ந்ததை பார்த்து  கருண் நாயர் நான்காவது  ரன். ஓடுவதை நிறுத்திவிட்டார்.  இதனை தொடர்ந்து கிறிஸ் வோக்ஸ்க்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது அதன் பிறகு விளையாட வரவில்லை. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஆறு ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக இந்தியாவின் வெற்றிக்கு இரண்டு விக்கெட்டுகளும் ,இங்கிலாந்து வெற்றிக்கு 18 ரன்களும் தேவை என்று இருந்த நிலையில் தற்போது தோள்பட்டையில் காயமடைந்து கையில் கட்டு போட்டு இருக்கும்போதும் கடைசி விக்கெட்டிற்காக கிறிஸ் வோக்ஸ் களமிறங்கி விளையாடினார்.