தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கிய பண்டிகை நாட்களில் அரசு சார்பில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அதன்படி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 5 நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 9 ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதனைப் போலவே ஆகஸ்ட் 7ஆம் தேதி சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணர் கோவில் ஆடித்த பசு விழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது
