முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தொழில் முதலீட்டு மாநாட்டில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த REG நிறுவனம் தூத்துக்குடியில் ரூபாய் 4953 கோடி முதலீட்டில் பைபர் உற்பத்தி ஆலை அமைக்கிறது. இன்று இதற்கான ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது.
மேலும் கங்கைகொண்டானில் தென்கொரியாவின் HAWASEUNG நிறுவனம் 1520 கோடி முதலீட்டில் காலணி தொழிற்சாலை அமைக்கிறது. இதனால் 20,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
