தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அனைத்துக் கட்சிகள் இடையும் கூட்டணி பேச்சுவார்த்தை என்பது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் ஓபிஎஸ் எந்த பக்கம் செல்வது என்றே தெரியாமல் நடுவில் நின்று கொண்டிருக்கின்றார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக சில தினங்களுக்கு முன் ஓபிஎஸ் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓபிஎஸ்ஐ மீண்டும் சேர்த்துக் கொள்வது குறித்து எடப்பாடியிடம் நயினார் ராகேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். கூட்டணியில் ஓபிஎஸ் இல்லாவிட்டால் அவர் சார்ந்த வாக்குகள் பிரியும் என்று பாஜக நினைக்கிறது. நேற்று இருவரும் தனியாக 20 நிமிடங்கள் இது குறித்து ஆலோசனை செய்துள்ளார்கள்.
அதில் ஓபிஎஸ் இணைப்பது குறித்தும், இரண்டாம் கட்ட தலைவர்கள் முரண்பட்ட கருத்துக்களை தெரிவிக்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பது குறித்தும் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார். ஆனால் ஓபிஎஸ் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
