தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித். சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு ரசிகர்களின் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. ஆனால் அதன் பிறகு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் அஜித் ரசிகர்களால் இந்த திரைப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அஜித்தின் 64 வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்க போவதாக உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் அஜித்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சினிமா எனும் அற்புதமான பயணத்தி 33 ஆண்டுகளை கடந்துவிட்டேன்.ரசிகர்களை எனது சுயநலத்திற்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்த மாட்டேன்.
AKs thanks giving note on his 33 rd year in the film industry pic.twitter.com/qy9O91Wkcd
— Ajithkumar Racing (@Akracingoffl) August 3, 2025
என் வாழ்வின் பலம் மனைவி ஷாலினி தான். எல்லா தருணங்களிலும் என்னுடன் நின்றிருக்கிறார். என் குழந்தைகள் அனோஷ்கா மற்றும் ஆத்விக் இருவரும் என் வாழ்விற்கு அர்த்தம் கொடுத்தவர்கள். சமூகத்தின் மீது அக்கறை கொள்ளும் மனப்பான்மையோடு என்னை வளர்த்த என் தந்தை பி எஸ் மணி, என் அம்மா மோகினி மணி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஆதரவுக்கும் அன்பிற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
