இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டீங்க.. புது ரூட்டில் பிரேமலதா விஜயகாந்த்.. பரபரக்கும் தமிழக அரசியல் களம்…!

By Nanthini on ஆவணி 3, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே இன்று செய்தியாளர்களை சென்னையில் சந்தித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற பிரச்சாரமும் விஜயகாந்தின் ரத யாத்திரையும் இன்று முதல் தொடங்குகின்றது. கும்மிடிப்பூண்டியில் தொடங்கி கன்னியாகுமரி வரை மூன்று கட்ட பயணமாக எங்களுடைய பயணம் அமையும்.

இந்த முறை தேமுதிக யாருடன் கூட்டணி என்பது இதுவரை முடிவாகவில்லை. என்ன பேசுவார்கள், யாரை திட்டுவார்கள், யாரை குறை சொல்வார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒருவரை திட்டுவதும் குறை சொல்வது மட்டுமே அரசியல் கிடையாது. என்னுடைய தேர்தல் பிரச்சாரம் இந்த முறை வேறு மாதிரி வித்தியாசமாக இருக்கப் போகின்றது. நாங்கள் எங்க கூட்டணி அமைக்கிறோமோ, அந்தக் கூட்டணி தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். எங்களுடைய தேர்தல் பிரச்சாரம் அதை நோக்கியே இருக்கும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் கட்சி மாநாட்டில் அறிவிப்போம் என்ற பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

   

இதனிடையே அண்மையில் முதல்வர் ஸ்டாலினை பிரேமலதா சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்ற நிலையில் நலம் விசாரிக்க மட்டுமே ஸ்டாலினை சந்திக்க சென்றதாக பிரேமலதா கூறினாலும் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாக பல யூகங்களுக்கு வித்திட்டு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது பிரச்சாரத்தில் யாரையும் விமர்சிக்க போவதில்லை என்று பிரேமலதா கூறியுள்ளதும் கவனம் பெற்றுள்ளது.