தந்தைக்காக பாடல் பாடி அசத்திய மகள் இனியா… கண்ணீர் விட்டு அழுத தேவயானி… சரிகமப மேடையில் நெகிழ்ச்சி தருணம்..!!

By Hema on ஆவணி 3, 2025

Spread the love

சரிகமப சீசன் 5 ல் தேவயானி மகள் இனியா போட்டியாளராக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாரம் டெடிகேஷன் சுற்றில் தனது தந்தைக்காக பாடல் பாடி அனைவரையும் கண் கலங்க வைத்துள்ளார். ஜீ தமிழ் சேனலில் வெளியாகி வரும் சரிகமப நிகழ்ச்சி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சரிகமப சீசன் 5 தற்போது நடந்து வருகிறது அதில் இந்த வாரம் ‘டெடிகேஷன் சுற்று’ என்று வைத்தனர்.அதில் போட்டியாளர்கள் தன் வாழ்க்கையின் முக்கியமானவர்களாக பாடலை பாடி டெடிகேட் செய்ய வேண்டும் என்று இருந்தது.

நிறைய போட்டியாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து தேவயானியின் மகள் இனியா தனது தந்தைக்காக பாடல் பாடினார். அதனைக் கண்டு தேவயானி மற்றும் நடுவர்கள் கண் கலங்கினர். மேலும் அவர் பாடிய பாடலுக்கு கோல்டன் பாராட்டு கிடைத்ததுடன் மக்களும் இனியாவை பாராட்டி வருகின்றனர்.