தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் பணிகளை கட்சித் தலைவர் விஜய் உத்தரவின் பேரில் பொதுச் செயலாளர் ஆனந்த் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார். இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் நிகழ்ச்சிகளிலும் பேனர்களிலும் கட்சித் தலைவர் விஜய், பொதுச் செயலாளர் ஆனந்த் புகைப்படங்களை கட்சியினர் பயன்படுத்தி வந்தனர். இப்படியான நிலையில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் தமிழக வெற்றி கழகம் நிகழ்ச்சிகளில் தலைவர் விஜய் படத்தை தவிர வேறு யாருடைய படத்தையும் பயன்படுத்தக் கூடாது என்று கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஆனந்த் கட்சியினருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், நமக்கு ஒரே ஒரு தலைவர் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் மட்டும் தான்.
வருகின்ற 2026 தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து தலைவர் விஜயை தமிழக முதல்வர் அறியாசனத்தில் அமர வைப்பதே நம்முடைய குறிக்கோள். இதற்காக நம் ஒரே தலைவரான விஜயுடன் கைகோர்த்து தீவிரமாக களப்பணியாற்ற உறுதி ஏற்போம். இனி கட்சியின் நிகழ்ச்சிகளிலோ விளம்பர பேனர்களிலோ எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்சித் தலைவர் விஜய் புகைப்படம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்னுடைய படத்தை இனி யாரும் பயன்படுத்தக் கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்
