“யாரும் தொட்டா அவ்ளோ தான்” வெள்ளத்தில் அடித்து வந்த தங்கம், வைரம்… பார்த்ததும் துள்ளி குதித்த மக்கள் ஆனால்… கடைசியில் இப்படி ஆகிடுச்சே..!!

By Soundarya on ஆவணி 2, 2025

Spread the love

சீனாவின் ஷான்லி மாகாணத்தில் கனமழை பெய்தததையடுத்து அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்ப்படும் அபாயம் இருந்தது. எனவே அங்குள்ள பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்குள் இரவு முழுக்க ஊழியர்கள் நகைகளை பாதுகாத்திருக்கிறார்கள். இருப்பினும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கடையில் இருந்த தங்கம், வெள்ளி நகைகள் அடித்து செல்லப்பட்டுள்ளது. உடனே கடை உரிமையாளர்கள் தன்னுடைய ஊழியர்களை விட்டு தேடி எடுத்து வருமாறு கூறியிருக்கிறார். இந்த தகவல் பரவிய நிலையில் அங்குள்ள மக்களும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்கள். தங்கம், வெள்ளி நகை மட்டும் இல்லாமல் வைரம், மரகத கற்கள் பதித்த மோதிரங்கள், வளையல்கள் உட்பட பல பொருட்கள் காணாமல் போய் உள்ளது.

மேலும் புதிய கையிருப்பு, மறுசுழற்சி செய்யப்பட்ட தங்கம், ரொக்க பணம் இருந்த கடையின் பாதுகாப்பு பெட்டகமும் காணாமல் போய்யுள்ளது. நிலவரப்படி  அடித்து செல்லப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் 12 கோடி இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது .கடை ஊழியர்கள் இரண்டு நாட்கள் அந்த பகுதியில் தேடி சுமார் ஒரு கிலோ நகைகளை வைத்துள்ளார்கள். காணாமல் போன நகைகளை மக்கள் சேற்றில் தேடும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் யாரவது  நகையை எடுத்துவிட்டு திருப்பிக் கொடுக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று கடை உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.