தெலுங்கானா மாநிலம் நாராயண் பேட்டையில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. நாராயண் மாவட்டத்தின் மரிக்கல் மண்டலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 10 வயது சிறுமி ஒருவர் தன்னுடைய சொந்த தந்தையால் பாலில் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கிராமத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். சமீபத்தில் நாய் கடித்ததால் வீட்டில் இருந்துள்ளார் அந்த சிறுமி. இந்த நிலையில் ஜூலை 25ஆம் தேதி அன்று மதியம் சிறுமியின் தாய் வேலைக்கு சென்ற நிலையில் சிறுமி வீட்டில் படித்துக் கொண்டிருந்தபோது குடிபோதையில் இருந்த அவருடைய தந்தை ஆடு மேய்த்து விட்டு திரும்பி வந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் .
அப்போது சிறுமி “அப்பா உன்னை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். என்னை எதுவும் செய்யாதே” என்று கதறியும் விடாத தந்தை தொடர்ந்து அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சிறுமியை மீட்டுள்ளார்கள். அப்போது சிறுமி ரத்தப்போக்கோடு இருந்துள்ளார். பிறகு வேலையில் இருந்து வீடு திரும்பி அவருடைய தாய் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்துள்ளார், தற்போது சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்ட தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .தற்போது குற்றம் சாட்டப்பட்ட தந்தை தலைமுறைவாக உள்ளார்.
