சமீப காலமாகவே ஏராளமான மாரடைப்பு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஹரியானா மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது இங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக பணிபுரிந்த 30 வயது இளைஞர் ஒருவர் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கடையருகில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
அந்த இளைஞர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது திடீரென்று சரிந்து கீழே விழுகிறார்.சம்பவத்திற்கு பிறகு சக ஊழியர்கள் அவரைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.
